இசை, நடிப்பை அடுத்து கிரிக்கெட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Saturday,August 06 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருவதோடு, தற்போது வெற்றிகரமான ஹீரோவாகவும் உருவாகியுள்ளவர் ஜி.வி.பிரகாஷ். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இசை, நடிப்பை அடுத்து தற்போது கிரிக்கெட்டிலும் ஜி.வி.பிரகாஷ் காலடி எடுத்து வருகிறார். ஆம், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள TNPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தூத்துக்குடி அணிக்கு ஜி.வி.பிரகாஷ் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அணிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகியுள்ளதால், அந்த அணிக்காக ஒரு பிரத்யேக பாடலை அவர் கம்போஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிக்கு சென்னை ஆல்பர்ட் திரையரங்க உரிமையாளர் முரளி உரிமையாளர் என்பதும் இந்த அணிக்கு பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.