இசை, நடிப்பை அடுத்து கிரிக்கெட்டில் களமிறங்கிய ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Saturday,August 06 2016]

கோலிவுட் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருவதோடு, தற்போது வெற்றிகரமான ஹீரோவாகவும் உருவாகியுள்ளவர் ஜி.வி.பிரகாஷ். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களுக்கு இணையாக ஒரே நேரத்தில் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இசை, நடிப்பை அடுத்து தற்போது கிரிக்கெட்டிலும் ஜி.வி.பிரகாஷ் காலடி எடுத்து வருகிறார். ஆம், இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள TNPL கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தூத்துக்குடி அணிக்கு ஜி.வி.பிரகாஷ் பிராண்ட் அம்பாசிடராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அணிக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆகியுள்ளதால், அந்த அணிக்காக ஒரு பிரத்யேக பாடலை அவர் கம்போஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அணிக்கு சென்னை ஆல்பர்ட் திரையரங்க உரிமையாளர் முரளி உரிமையாளர் என்பதும் இந்த அணிக்கு பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சாமி'க்கும் 'சாமி 2'க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் இதுதான்!!

விக்ரம் நடிப்பில் ஹரி இயக்கிய 'சாமி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் மிக விரைவில் தொடங்கவுள்ளதாக 'இருமுகன்' இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஹரி அறிவித்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்-அமலாபால் இணைந்து எடுத்த முக்கிய முடிவு

கடந்த சில நாட்களாக இயக்குனர் விஜய் மற்றும் நடிகை அமலாபால் ஆகிய இருவரும் விவகாரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சமீபத்தில் இதுகுறித்து இயக்குனர் விஜய் நீண்ட விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

வில்லன் நடிகருக்கு ஜோடியாகும் செல்வராகவன் நாயகி

'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ரெஜினா, தற்போது செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதியின் 'தர்மதுரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டு 'யூ' சர்டிபிகேட் பெற்றது என்பதை பார்த்தோம்.

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் ஒரு இந்திய இயக்குனர்?

தற்போதைய காலகட்டத்தில் ஒரு திரைப்படம் ரூ.100 கோடி வசூல் செய்தாலே மிகப்பெரிய விஷயமாக கருதப்படும் நிலையில் ஒரு திரைப்பட இயக்குனரின் சம்பளம் மட்டுமே ரூ.100 கோடி என்ற தகவல் இந்திய திரையுலகினர் அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது....