உதவியாளரை இசையமைப்பாளராக்கிய ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Thursday,October 20 2016]

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பது மட்டுமின்றி கோலிவுட்டில் முன்னணி நடிகராகவும் விளங்கி வருகிறார். அவர் நடித்து இசையமைத்த 'புரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படங்கள் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் புரூஸ்லீ' படத்தில் ஒரே ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷின் உதவியாளர் கணேசன் சேகர் கம்போஸ் செய்துள்ளார். 'நெருப்புடா' புகழ் அருண்காமராஜ் எழுதி பாடியுள்ள ''நான் தான் ஒங்கப்பண்டா' என்று தொடங்கும் இந்த பாடலுக்கு ஜி.வி.பிரகாஷ் நடனம் ஆடியுள்ளார்.
இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் மற்றும் அவருடைய உதவியாளர் கணேசன் சேகர் ஆகியோர் தங்கள் சமூக வலைத்தளங்களில் உறுதி செய்துள்ளனர். தன்னுடைய உதவியாளர் 'புரூஸ்லீ' படத்தின் ஒரு பாடலை கம்போஸ் செய்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

விஜய்சேதுபதி-டி.ராஜேந்தர் 'கவண்' படத்தில் இன்னொரு ஹீரோ

விஜய்சேதுபதி, டி.ராஜேந்தர் நடிப்பில் பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்தின் டைட்டில் 'கவண்'...

ஸ்ருதிஹாசனை அடுத்து தந்தையுடன் நடிக்கும் ரஜினி மகள்

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முதலாக தனது தந்தை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே...

அஜித் 57' படத்திற்கு ஸ்டைலிஷ் பாலிவுட் வில்லன்

'தல அஜித்' நடித்து வரும் 'அஜித் 57' படத்தின் வில்லன் நடிகர் ஒரு பிரபலமான பாலிவுட் நடிகராகத்தான் இருக்கும்...

'வீரம்' படத்திற்கு விஜய் கொடுத்த கமெண்ட். பரதன்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் இயக்குனர் பரதன் இதற்கு முன்னர் விஜய் நடித்த 'அழகிய தமிழ் மகன்'...

விஜய்யின் 'பைரவா' படத்தில் இணையும் அருண்பாண்டியன்

பிரபல நடிகரும் விநியோகிஸ்தருமான அருண்பாண்டியன் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'பைரவா' படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது...