அனைத்து சுர்ஜித்தையும் காப்பாற்றுங்கள்: ஜிவி பிரகாஷ் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வெள்ளி அன்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஆழ்குழாய் கிணறு ஒன்றில் இரண்டு வயது சுர்ஜித் என்ற சிறுவன் தவறி விழுந்து விட்டார். அந்த சிறுவனை மீட்க 66 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு படையினர் போராடி வருகின்றனர். இருப்பினும் மீட்பு பணிகளில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை
இந்த நிலையில் சுர்ஜித்திக்கு ஏற்பட்ட நிலைமை இன்னொரு குழந்தைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது. எனவே தமிழகத்தில் மூடப்படாமல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தமிழக அரசும் இது குறித்த நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே இருக்கும் சமூக ஆர்வலர்கள் மூடப்படாமல் இருக்கும் துணை கிணறுகளை அவர்களே தங்களது சொந்த செலவில் மூடி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன
இந்த நிலையில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவர்கள் ஒரு செய்தியை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நண்பர்கள் கொஞ்சம் முடிந்தால் உங்களுக்கு தெரிந்த, பக்கத்தில் ஏதேனும் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருந்தால் அதை மூட வைப்பதற்கான வேலையை செய்யுங்கள். இனி இதுபோல் துயரத்தையும் கஷ்டங்களையும் எந்த சுர்திக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்
Share ... important pic.twitter.com/6dN8JpOqL5
— G.V.Prakash Kumar (@gvprakash) October 28, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments