டாஸ்மாக் காட்சி இல்லாத முதல் ராஜேஷ் படம் 'கிக்'

  • IndiaGlitz, [Wednesday,September 07 2016]

இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கிய 'சிவா மனசுல சக்தி' படத்தில் இருந்து 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை அனனத்து படங்களிலும் டாஸ்மாக் காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில் 'கிக்' என்ற டைட்டில் வைத்திருந்த போதிலும் டாஸ்மாக் காட்சி இல்லாத முதல் படமாக 'கடவுள் இருக்கான் குமாரு' படம் அமைந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஜாலியான ரோடு படம் என்றும் இதில் காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்த ஒரு எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் கூறப்படும். மேலும் இதுவொரு ரோடு பிலிம் என்பதால் பெரும்பாலும் சாலைகளில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சென்னை ஈ.சி.ஆர் ரோடு, பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளன.
மேலும் இந்த படம் எம்.ராஜேஷின் முந்தைய படங்கள் போலவே 'யூ' சர்டிபிகேட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

More News

விஜய்-அட்லி மீண்டும் இணைவது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய அட்லி, மீண்டும் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டு...

தனுஷின் அடுத்த அவதாரம் இன்று முதல் ஆரம்பம்

'துள்ளுவதோ இளமை' படத்தில் நடிகராக அறிமுகமாகிய தனுஷ், கோலிவுட் திரையுலகில் தனது அயராத உழைப்பினால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார்...

பிரபுதேவாவின் தேவியும், 9 செண்டிமெண்ட்டும்!!

பாலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக பிசியாக இருந்த பிரபுதேவா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கோலிவுட்டுக்கு திரும்பி...

ரஜினி-அப்துல்கலாம் உதவியாளர் திடீர் சந்திப்பு

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் சமீபத்தில் புதிய அரசியல் கட்சி...

ரம்யா படத்திற்கு ரஜினி பட வசனத்தின் டைட்டில்

ஏற்கனவே ரஜினியின் புகழ்பெற்ற வசனமான 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' என்ற வசனத்தை டைட்டிலாக கொண்டு ஒரு திரைப்படம்...