கங்கனா ரனாவத் அடுத்த படத்தில் ஜிவி பிரகாஷ்: வைரல் புகைப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கங்கனா ரணாவத் உடன் இணைந்து பணிபுரிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத் தமிழில் ’தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
மேலும் 'கங்கனாவை நேரில் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்றும் அவருடைய லட்சியமான பிரம்மாண்டமான திரைப்படத்தில் பணிபுரிவதில் மிகுந்த உற்சாகம் என்றும் ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். மேலும் கங்கனாவுடன் ஜீவி பிரகாஷ் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இருப்பினும் இருவரும் இணைந்து எந்த படத்தில் பணிபுரிய உள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. அனேகமாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் கங்கனா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கங்கனாவின் ‘தலைவி’ படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.
Super happy meeting the most talented #KanganaRanaut … super excited to be working on her most ambitious magnum opus film … ??✨?? pic.twitter.com/V8PX5Xq070
— G.V.Prakash Kumar (@gvprakash) June 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments