3வது முறையாக முன்னணி இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Thursday,December 12 2024]

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முன்னணி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் உருவான இரண்டு படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும், ’காதல் கொண்டேன்’ முதல் ‘நானே வருவேன்’ வரை அனைத்து படங்களும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நடிப்பதில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’, ’மயக்கமென்ன’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக அவருடைய படத்தில் இசையமைக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் மீண்டும் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More News

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூன்று குரங்குகள்.. தன்னை பற்றி அவதூறாக பேசியவர்கள் குறித்து நயன்தாரா.. வீடியோ வைரல்..!

தன்னை பற்றி அவதூறாக பேசிய மற்றும் பேசிக் கொண்டிருக்கும் மூன்று நபர்களை குரங்குகள் என்று நயன்தாரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நானும் எனது மனைவியும் பிரிகிறோம்: 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெற்ற சீனு ராமசாமி

நானும் எனது மனைவியும் பிரிகிறோம் என 17 வருட திருமண வாழ்க்கைக்கு விடை கொடுத்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் செய்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏழு சக்கரங்களின் அற்புத சக்தி பெற செய்ய வேண்டியது

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் ஸ்ரீதரன் கோபால் அவர்கள், ஆன்மீகம் மற்றும் ஜோதிடத்தின் ஆழமான இணைப்பை விளக்குகிறார்.

ஜாதகம், வாஸ்து, மற்றும் நியூமராலஜி மூலம் வாழ்க்கை சிக்கல்களுக்கு தீர்வு!

ஆன்மீகக்ளிட்ஸ் - ஆன்மீக உலகத்தை மையமாகக் கொண்ட உங்கள் நம்பத்தகுந்த இணையதள வீடியோ சேனல்.