3வது முறையாக முன்னணி இயக்குனருடன் இணையும் ஜிவி பிரகாஷ்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முன்னணி இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் உருவான இரண்டு படங்களுக்கு இசையமைத்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன் என்பதும், ’காதல் கொண்டேன்’ முதல் ‘நானே வருவேன்’ வரை அனைத்து படங்களும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது நடிப்பதில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.
மேலும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’ஆயிரத்தில் ஒருவன்’, ’மயக்கமென்ன’ ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது முறையாக அவருடைய படத்தில் இசையமைக்க உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து செல்வராகவன் மற்றும் ஜிவி பிரகாஷ் மீண்டும் இணையும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
The genius filmmaker’s next announcing tomm . A @selvaraghavan film …… doing music again for him after #aayirathiloruvan and #mayakkamenna for the third time . pic.twitter.com/C2lKpotpRj
— G.V.Prakash Kumar (@gvprakash) December 12, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout