கார்த்தியின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி, தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்

கார்த்தியின் அடுத்த படத்தை ’இரும்புத்திரை’ மற்றும் ’ஹீரோ’ படங்களை இயக்கிய மித்ரன் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் இசையமைக்கும் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது

இயக்குனர் மித்ரனின் முந்தைய இரண்டு படங்களிலும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பதும், சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் அவர் நடிக்க உள்ள வாடிவாசல் படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது