ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,March 06 2019]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'சர்வம் தாளமயம்' வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள '100% காதல்', 'வாட்ச்மேன்' மற்றும் 'குப்பத்து ராஜா' ஆகிய மூன்று திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் 'வாட்ச்மேன்' திரைப்படம் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு விருந்தாக வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாட்ச்மேன்' படத்தில் ஜிவி பிரகாஷ், யோகிபாபு, ராஜ் அர்ஜூன், சக்யுக்தா ஹெக்டே உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டபுள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
 

More News

வீட்டுக்கு வாங்க, உங்களை கொலை செய்றேன்: அக்சயகுமாரை மிரட்டிய மனைவி

பிரபல நடிகர், நடிகைகளின் பார்வை தற்போது டிஜிட்டல் மார்க்கெட் பக்கம் போய் கொண்டிருக்கின்றது என்பது தெரிந்ததே.

ஜிவி பிரகாஷின் 'குப்பத்து ராஜா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜிபி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து முடித்துள்ள '100% காதல்' மற்றும் 'வாட்ச்மேன்' ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது

காஜல் அகர்வாலை அடுத்து தயாரிப்பாளராகும் பிரபல நடிகை!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் தயாரிப்பாளரான செய்தி தெரிந்ததே.

நாக்பூர் மைதானத்தில் ரசிகருடன் ஓடிப்பிடித்து விளையாடிய தோனி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே 2வது ஒருநாள் போட்டி தற்போது நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது

ராகவா லாரன்ஸ் இயக்கும் அடுத்த படத்தில் நாயகனாகும் 2.0' நடிகர்

ராகவா லாரன்ஸ் இயக்கிய 'காஞ்சனா 3; திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் 'காஞ்சனா' திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யவிருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்