ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' சென்சார் தகவல்

  • IndiaGlitz, [Saturday,February 09 2019]

ஜிவி பிரகாஷ் நடித்த 'சர்வம் தாளமயம்' சமீபத்தில் வெளியாகி ஊடகங்களில் பாராட்டுக்களை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்த '100% காதல்' ஐங்கரன், மற்றும் 'வாட்ச்மேன்' ஆகிய 3 திரைப்படங்களும் ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் 'வாட்ச்மேன்' படத்தின் சென்சார் தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சாரில் இருந்து 'யூ' சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதனையடுத்து படக்குழுவினர் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கவுள்ளனர்.

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், சம்யுக்தா ஹெக்டே, ராஜ் அர்ஜூன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் நிரவ் ஷா ஓளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டபுள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.