'தனுஷ் 43' படம் குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷின்’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய’ஜெகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான ’தனுஷ் 43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம். ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்த நிலையில் தற்போது மேலும் இந்த படத்தின் பாடல்கள் குறித்து ஒரு அப்டேட்டை தனது சமூக வலைத்தள பக்கத்தில் செய்துள்ளார்.
‘தனுஷ் 43’ படத்தின் பாடல்கள் முழுமையாக முடிந்துவிட்டது. இந்த படத்தில் பாடல்கள் உருவாகி முடிந்ததும் அதன் வடிவத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன் மேலும் சில அப்டேட்டுகள் தருகிறேன். மேலும் தனுஷூடன் ஒரு சூப்பர் காம்பினேஷன் இந்த படத்தில் இணைந்துள்ளது. விரைவில் ‘தனுஷ் 43’ ஆடியோ உங்கள் கைகளில்’ என்று தெரிவித்துள்ளார். ’தனுஷ் 43’ படத்தை சமீபத்தில் வெளியான ’மாபியா’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#d43 am super happy with the way the audio is shaping up ... once the shoot of the film starts we will update over it .... another super combination with @dhanushkraja as audio in #d43 on the way ...
— G.V.Prakash Kumar (@gvprakash) September 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments