இப்படி ஒரு பொண்ணு ரிஜக்ட் செஞ்சா பெருமைதான்: 'செம' டிரைலர் எப்படி?

  • IndiaGlitz, [Monday,May 14 2018]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் பல படங்களில் ஒன்று 'செம'. இந்த படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

பொண்ணு பார்க்கப் போகும் ஜிவி பிரகாஷின் அனுபவங்கள் தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. ஜிவி பிரகாஷ், யோகிபாபு காமெடி படத்தின் பிளஸ் என்பது உறுதியாகிறது. பார்க்கும் பெண்கள் எல்லோரும் ஜிவி பிரகாஷை ரிஜக்ட் செய்ய, நாயகியை பெண் பார்க்க வரும் ஜிவி பிரகாஷ் தன்னுடைய அம்மாவிடம் 'இந்த பொண்ணும் என்னை ரிஜக்ட் செய்துவிடுமா? என்று கேட்க, இவ்வளவு அழகான பொண்ணு ரிஜக்ட் செஞ்சாலும் தப்பில்லை, நம்ம குடும்பத்துக்கு பெருமைதான் என்று கூறுவது காமெடியின் உச்சம். முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் காமெடிகள் டிரைலரில் இருப்பது போல் படத்திலும் இருந்தாலும் ஜிவி பிரகாஷூக்கு அடுத்த ஹிட் படம் ரெடி

மே 25ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், அர்த்தனாபினு, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவும், பிரதீவ் ராகவ் படத்தொகுபு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்