ஜிவி பிரகாஷின் 'செம' ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கிய 'நாச்சியார்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'செம' படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்து ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் ஜிவி பிரகாஷின் 'செம' திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஜிவி பிரகாஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

ஜிவி பிரகாஷ், அர்த்தனாபினு, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா சிவகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வள்ளிகாந்த் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவும், பிரதீவ் ராகவ் படத்தொகுபு பணியும் செய்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் தனது பசங்க புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்

More News

ரெஜினாவின் முதல் முயற்சிக்கு குவியும் பாராட்டுக்கள்

கார்த்திக், கவுதம் கார்த்திக் முதன்முதலில் இணைந்து நடித்து வரும் 'Mr.சந்திரமெளலி படத்தின் நாயகியாக நடிகை ரெஜினா நடித்து வந்தார் என்பது தெரிந்ததே.

'மன்னன்' விஜயசாந்தி கேரக்டரில் நயன்தாரா?

ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கிய 'மன்னன் என்ற வெற்றி படத்தில்  விஜயசாந்தி நடித்த போல்டான கேரக்டர் போன்ற ஒரு கேரக்டரில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக நீட் மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஷால்

நீட் தேர்வு நாளை ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில் தமிழக மாணவர்கள் சிலருக்கு மட்டும் வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மகளின் நீட் தேர்வுக்காக கம்மலை அடகு வைத்த தாய்

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைத்தேர்வான நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த சில தமிழக மாணவர்களுக்கு கேரளா உள்பட வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிக்கு சிறப்பு ரயில், நீட் மாணவர்களுக்கு சிறப்பு ரயில் இல்லையா?

தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு அமைப்பினர்களும், தனிப்பட்ட வகையிலும் பலர் உதவி செய்து வருகின்றனர்.