ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் 'ரெபல்' படத்தின் டீசர் வெளியீடு

  • IndiaGlitz, [Saturday,November 11 2023]

தேசிய விருதை வென்ற இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் 'ரெபல்' படத்தின் டீசர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றமும், ஆவேசமான கதாபாத்திர குணாதிசயமும் ரசனையுடன் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதால் ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. இதன் காரணமாக 'ரெபல்' படத்தின் டீசர் குறுகிய கால அவகாசத்திற்குள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

More News

ரெட் கார்டுக்கு பஞ்சமே இல்லை.. நிறைய இருக்கும்.. விசித்ராவுக்கு வேற லெவல் பதில் கொடுத்த கமல்ஹாசன்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப்பை அநியாயமாக விரட்டிய மாயா, பூர்ணிமா கும்பலுக்கு இன்று கமல்ஹாசன் சரியாக பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்ததை விட அதிகமாக

என்னை பத்தி பேச யாருக்கும் ரைட்ஸ் இல்லை: மாயா கேங்கிற்கு வார்னிங் கொடுத்த ரட்சிதா..

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான மாயா, தினேஷை வீழ்த்துவதற்காக ரட்சிதா குறித்து பேச வேண்டும் என்று பூர்ணிமாவுக்கு ஆலோசனை கூறிய நிலையில் இது குறித்து ரட்சிதா தனது சமூக

கமல் கேட்கும் அடுக்கடுக்கான கேள்விகள்.. பேயறைந்தவாறு இருக்கும் மாயா, பூர்ணிமா, ஜோவிகா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய முதல் புரோமோவில்  பிரதீப் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உத்தமர்களா என்ற கேள்வியை எழுப்பிய கமல்ஹாசன் கண்டிப்பாக அவர்களையும் தண்டிப்பேன் என்று கூறியிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேய்.. 'ஜிகிர்தண்டா 2' படம் குறித்து பார்த்திபன்..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா 2' படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த நடிகரும்

அனல் பறக்கும் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஜெயம் ரவி.. இதுதான் காரணம்..!

பிக் பாஸ் வீடு ஒரு பக்கம் பிரதீப் வெளியேற்றத்தினாலும், இன்னொரு பக்கம் மாயா பூர்ணிமா குரூப்பின் அட்டகாசத்தாலும் பரபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு ஜெயம் ரவி செல்ல இருப்பதாக