அடுத்த கட்டத்திற்கு செல்கிறது ஜிவி பிரகாஷ் திரைப்படம்.. குரூப் புகைப்படம் வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’ரிபெல்’ என்பதும் இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் மூணாறு உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்ததாகவும் வடசென்னை பகுதியில் உள்ள குத்துச்சண்டை வீரர்கள் இன்னொரு பக்கத்தை ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தில் காட்டியது போல் ’ரிபெல்’ படம் மூணாறு மக்களின் இன்னொரு பகுதியை எடுத்துக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படப்பிடிப்பு முடிந்தவுடன் எடுக்கப்பட்ட குரூப் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் உள்பட அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
It’s a wrap for #rebel . Will be a game changer in tamil cinema . One promising director is on his way … thanks @kegvraja sir @NikeshRs @Arunkrishna_21 @NehaGnanavel @Dhananjayang @StudioGreen2 pic.twitter.com/A53pTsnRzs
— G.V.Prakash Kumar (@gvprakash) October 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments