ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' ரிலீஸ் தேதி இதுதான்: விரைவில் புரமோஷன் பணிகள்..!

  • IndiaGlitz, [Thursday,January 25 2024]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் நிகேஷ் இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகிய ‘ரிபெல்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக மமிதா பஜிலு என்பவர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் வெங்கடேஷ், ஷாலு ரஹிம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவான இந்த படம் மார்ச் 22ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய வீடியோ வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோவில் ஜிவி பிரகாஷின் மாஸ் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 42 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த வீடியோவை பார்க்கும் போது இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட இருக்கும் நிலையில் இந்த படம் ஜிவி பிரகாஷ்க்கு மற்றொரு வெற்றி பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.