ஜிவி பிரகாஷின் அடுத்தடுத்த 3 ரிலீஸ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று வெளியான தனுஷின் ’அசுரன்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், அடுத்த கட்டமாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவர உள்ள படங்கள் குறித்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
அசுரனை அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்த ’ஜெயில்’ படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும், இந்த படத்தை தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய வசந்தபாலன் இயக்கி உள்ளார் என்றும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து சூர்யாவின் ’சூரரைப்போற்று’ படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளதாகவும், இது தான் இசையமைக்கும் 70ஆவது படத்தின் ஆல்பம் என்றும் ஜிவி பிரகாஷ் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த இரண்டு படங்களை அடுத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது என்பதையும் ஜிவி பிரகாஷ் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்க ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடிக்க உள்ளனர்ர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரகாஷின் அடுத்தடுத்த மூன்று ஆல்பங்கள் ரசிகர்களை திருப்தி அடையச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My next album after #asuran will be #jail with #vasanthabalan sir who introduced me to cinema .. then #sooraraipotru with suriya sir #GV70 and then jayalalitha mam bio pic with #kanganaranaut #alvijay in hindi ..
— G.V.Prakash Kumar (@gvprakash) October 5, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com