ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் நடிப்பு மற்றும் இசை என இரண்டு குதிரைகளில் திறமையாக சவாரி செய்து வருகிறார் என்பதையும் இரண்டையும் அவர் எப்படி மேனேஜ் செய்கிறார் என்பது மிகப்பெரிய ஆச்சரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிவி பிரகாஷ் இசையில் ’கேப்டன் மில்லர்’, ’மார்க் ஆண்டனி’, ’தங்கலான்’, ’எமர்ஜென்சி’, ’ஜப்பான்’, ’மிஷன் சாப்டர் ஒன்’, ’கள்வன்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. அதேபோல் அவரது நடிப்பில் ’இடி முழக்கம்’ ’13’ ’அடியே’ ’டியர் ’ஆகிய படங்களும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ’அடியே’. பிரபா பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய இடத்தில் வெங்கட் பிரபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சயின்டிபிக் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் மன அழுத்தத்தில் இருக்கும் ஜிவி பிரகாஷ் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.