தனுஷின் 'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட்: ஜிவி பிரகாஷை கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Saturday,December 11 2021]

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’ படத்தின் மாஸ் அப்டேட்டை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளதை அடுத்து அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாறன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘மாறன்’ படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் அதிரடி ஆக்ஷன் படத்திற்கான பின்னணி இசையை எதிர்பார்க்கலாம் என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷின் இந்த அப்டேட்டை அடுத்து ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தனுஷ், மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் பத்திரிகையாளர்கள் கேரக்டர்களில் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.