இங்கே பேயும் நெசம்.. சாவும் நெசம்.. : ஜிவி பிரகாஷின் 'கிங்ஸ்டன்' டீசர்..

  • IndiaGlitz, [Thursday,January 09 2025]

ஜிவி பிரகாஷ் நடித்த ‘கிங்ஸ்டன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ள நிலையில், இந்த டீசர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒன்றரை நிமிடங்களுக்கும் அதிகமாக உள்ள இந்த டீசரில் அசத்தலான காட்சிகள் இருப்பதை எடுத்து, இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் முதல் முறையாக கடலில் ஒரு பேண்டஸி திரைப்படம் உருவாகி இருப்பதாக தெரிகிறது. ஜி.வி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் உருவான இந்த படத்தை கமல் பிரகாஷ் இயக்கி உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் வரும் மார்ச் 7ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்மமான முறையில் கடல் நடுவே உள்ள ஒரு கப்பலில் சிக்கிக் கொள்பவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது டீசரில் இருந்து தெரிய வருகிறது. மேலும், இந்த படத்தில் ‘இதுவரைக்கும் கடலுக்குள்ள போன யாரும் உசுரோட திரும்பி வந்ததில்ல, மீறிப் போனா’ ’பேய் வரும்னு கட்டுக்கதை சொல்லி கூட்டி வந்து இருக்கீங்க. ஆனா இங்க பேயும் நெசம், சாவும் நெசம்’ ’இந்த சமுத்திரத்தை ஆள ஒருத்தன் பிறந்து தான் வரணும்’ போன்ற வசனங்கள் இந்த படத்தின் மர்மத்தை எதிர்பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'விடாமுயற்சி'படத்தின் சென்சார், ரன்னிங் டைம் தகவல்.. ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்த 'விடாமுயற்சி'படத்தின் திரைப்படத்தின் சென்சார்  மற்றும் ரன்னிங் டைம் தகவல் வெளியாகி உள்ளது. அதை அடுத்து இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆக உள்ளது.

LOVE பண்ணும் போது இப்படி பண்ணலாமா…?

காதலின் இலக்கு காமம் ஆனாலும், காமத்தின் இலக்கு காதலானாலும் அதன் வாழ்வு தற்காலிகமானதுதான். காமம் கடந்த காதலே நீடித்து வாழும் என்பதை படதில் காட்டமாலே பார்வையாளனுக்கு கடத்திருக்கிறார்

இந்த வாரம் ஒரே ஒரு தமிழ்ப்படம் தான்: ஓடிடி ரிலீஸ் தகவல்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் நாளை முதல் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

சூர்யாவின் 'ரெட்ரோ' ரிலீஸ் தேதி.. கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு..!

சூர்யா நடித்த 'ரெட்ரோ' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் டீசர் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்,

மீண்டும் இணைகிறது 'மகாராஜா' கூட்டணி.. விஜய்சேதுபதிக்கு இன்னொரு வெற்றிப்படமா?

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' படம் வெறும் ரூ.30 கோடியில் தயாராகி