டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 'கள்வன்' திரைப்படம்.. ஸ்ட்ரீம் ஆகும் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மே 14 முதல், இயக்குநர் P.V. ஷங்கர் இயக்கத்தில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி, சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கள்வன்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது . இப்படத்தில் பாரதிராஜா, இவானா, KPY பாலா மற்றும் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

காடுகளின் பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தில், மனதை ஈர்க்கும் சம்பவங்களுடன், அற்புதமான விஷுவல், மயக்கும் இசை மற்றும் நடிகர்களின் பாராட்டத்தக்க நடிப்பு என “கள்வன்” படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்தது.

அரசின் வனக்காப்பாளராக மாற விரும்பும் திருடன் கெம்பன், அந்த வேலையில் சேர அவனுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் தேவைப்படுகிறது. அந்த பணத்தைத் திரட்ட அவன் எடுக்கும் முடிவுகள், அவனை எதிர்பாராத பல பிரச்சனைகளுக்கு இட்டுச் செல்கிறது. அதிலிருந்து அவன் விடுபட்டானா? அவன் கனவு நிறைவேறியதா ? என்பதே இப்படத்தின் கதை.

“கள்வன்” படத்தை ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரி சார்பில் G.டில்லி பாபு தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியதோடு, இயக்குநர் P.V. ஷங்கர் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு ரேவா பின்னணி இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பையும், N.K. ராகுல் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளையும் செய்துள்ளார்கள்.

இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை, எழுத்தாளர் ரமேஷ் ஐயப்பனுடன் இயக்குநர் P.V. ஷங்கர் எழுதியுள்ளார்.

வரும் மே 14 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் “கள்வன்” படத்தை கண்டுகளியுங்கள்.

More News

30 பாஸ்போர்ட்டுகள் 120 படங்கள் நடிகர் தியாகராஜனின் வாழ்க்கை வரலாறு

நடிகர் தியாகராஜன் அவர்கள் INDIA GLITZ க்கு பேட்டியில் என்னுடைய மகன் பிரசாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அந்தகன் படத்தை ரிலீஸ் செய்வதற்காக நல்ல நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பேச்சுவார்த்தைக்கு வராத கமல்ஹாசன்.. ரெட் கார்டு கொடுக்க முடிவா? அதிர்ச்சி தகவல்..!

நடிகர் கமல்ஹாசன் நடித்த 'உத்தம வில்லன்' தோல்வி விவகாரம் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசன் மற்றும் அவரது தரப்பில் இருந்து யாரும்

சூரியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தகவல்.. அட்டகாசமான போஸ்டர் ரிலீஸ்..!

நடிகர் சூரி ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று 'கருடன்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும்

திருமுருகாற்று படை மந்திரத்தின் அதிசய சக்தி🌟|திருச்செங்கோடு முருகன் அற்புதங்கள்! | சிவ சதீஷ்குமார்

தமிழகத்தின் முன்னணி ஆன்மீக பேச்சாளர்களில் ஒருவரான சிவ சதீஷ்குமார் அவர்கள், முருகனைப் பற்றிய ஆழமான உரையை "ஆன்மீக க்ளிட்ஸ்" என்ற யூடியூப் சேனலுக்கு வழங்கியுள்ளார்.

'நளதமயந்தி' சீரியல் விவகாரம்.. வதந்தி உண்மையாயிருச்சே.. பிரியங்கா நல்காரி பொய் சொன்னாரா?

ஜீ தமிழ் சேனலில் 'நளதமயந்தி' என்ற சீரியலில் நடித்து வந்த பிரியங்கா நல்காரி அந்த தொடரில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்ட நிலையில் தான் அந்த தொடரில் இருந்து விலகவில்லை