இந்த அரசாங்கம் பதில் சொல்லியே ஆகணும்: ஜிவி பிரகாஷின் 'ஜெயில்' டீசர்

  • IndiaGlitz, [Wednesday,October 27 2021]

ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜெயில்’ திரைப்படம் நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை சமீபத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்றது என்பதும், இதனை அடுத்து இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரில் ஜிவி பிரகாஷின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் ஆகியவை உள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் ஒரு வித்தியாசமான பரிணாமத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை அடுத்து இந்த படம் வெளிவந்தால் ஜிவி பிரகாஷ்க்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், அபர்ணதி, ராதிகா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும், கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.