ஜிவி பிரகாஷ் உடன் இணையும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம்: அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படம் ஒன்று நீண்டகாலமாக வெளியாகாமல் இருந்த நிலையில் அந்த திரைப்படத்தை வெளியிட ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முன்வந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ’ஜெயில்’. இந்த படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில வருடங்கள் ஆன நிலையிலும் ஒரு சில காரணங்களால் இந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருந்தது
இந்த நிலையில் தற்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணதி, ராதிகா, பிரபாகர், யோகிபாபு, ரோபோ சங்கர், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது
@StudioGreen2 will be releasing the film #Jail worldwide#StudioGreenReleasesJail @KrikesC @kegvraja @vasantabalan1 @gvprakash @realradikaa @proyuvraaj @SonyMusicSouth pic.twitter.com/VlFhnAN3uN
— Studio Green (@StudioGreen2) October 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments