ரஜினியின் பாணியை பின்பற்றும் ஜி.வி.பிரகாஷ்

  • IndiaGlitz, [Tuesday,December 29 2015]

டார்லிங், 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா ஆகிய இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்த ஜி.வி.பிரகாஷ் தற்போது மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். டார்லிங் இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஒரு படம், புரூஸ்லி மற்றும் எம்.ராஜேஷ் இயக்கத்தில் 'கடவுள் இருக்குறாரு குமாரு' ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.


இந்நிலையில் சாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தில் அவருடைய கேரக்டர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. முதல்முறையாக இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ், கேங்ஸ்டராக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இன்னொரு கேங்க்ஸ்டர் மகளான ஆனந்தியை காதலிக்கும் கேரக்டராகவும் அவருடைய கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'கபாலி' படத்தில் கேங்ஸ்டராக நடிப்பது போன்று அவருடைய பாணியில் ஜி.வி.பிரகாஷூம் கேங்ஸ்டராக நடித்து வருகிறர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாசரவணன், விடிவி கணேஷ் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.