தனியா வந்தா தல மட்டும் உருளும்.. 'கேப்டன் மில்லர்' படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே.
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் என்பதும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
இந்த படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பாடலை முதல் இரண்டு வரிகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வரிகள் இதுதான்:
நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்
நீ படையா வந்தா சவ மழ குவியும்
இந்த வரிகளில் தொடங்கும் இந்த பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ள நிலையில் இந்த பாடலுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை கேபர் வாசுகி என்பவர் எழுதியுள்ளார்.
I have tasted steel before I have the scars …..🔥🔥🔥 U will learn to fear my name and ur eyes will never see the same .. 🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) September 23, 2023
நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்🔥🔥
நீ படையா வந்தா சவ மழ குவியும் 🔥🔥
Killer killer captain millerrrrrrrrr …..
Audio preparations onway ……
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments