24 மணி நேரமும் அதையே நினைச்சுகிட்டு இருப்பியா? ஜிவி பிரகாஷின் 'பேச்சுலர்' டிரைலர்!

  • IndiaGlitz, [Monday,November 22 2021]

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பேச்சுலர்’ திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலரில் முழுக்க முழுக்க இவர்கள் இருவரது காட்சிகளே உள்ளன என்பதும் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல் மற்றும் மோதல் அதன்பின் ஏற்படும் விளைவுகள் ஆகிய காட்சிகளே இந்த டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இந்த டிரைலருக்கு பின் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும் சான் லோகேஷ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் ஜிவி பிரகாஷின் வெற்றிப்பட பட்டியலில் இணையும் என்பது டிரைலரில் இருந்தே தெரிய வருகிறது.