ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவைகளில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’ஜெயில்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது

இந்த நிலையில் ஜீவி பிரகாஷ் நடித்து வந்த படங்களில் ஒன்று ’பேச்சிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் 15 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் படக்குழுவினர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'சிங்கம்' பட நடிகரின் சகோதரர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'சிங்கம்' படத்தின் இந்தி ரீமேக் 2011 ஆம் ஆண்டு அதே பெயரில் வெளியானது.

குறும்படம் போடுங்க: இரண்டாவது நாளே போர்க்கொடி தூக்கும் அனிதா!

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் மீண்டும் ஷிவானி கார்னர் செய்யப்பட்டதையும், இரண்டாவது புரமோவில் அனிதா சம்பத்தின் உருக்கமான காட்சிகளும் இருந்தன.

தியேட்டர்களுக்கு விடிவுகாலம்… பாதுகாப்பு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!!!

அக்டோபர் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.

அலிகாரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு- உபியில் தொடரும் அவலம்!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் நாடு முழுவதும்

தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிப்போகுமா???

கொரோனா தாக்கத்தால் உலகம் முழுவதும் கல்விமுறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.