ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது: ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,October 06 2020]

நடிகரும் இசை அமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் இந்த ஆண்டு கிட்டத்தட்ட பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவைகளில் சில படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் நடித்த ’ஆயிரம் ஜென்மங்கள்’ ’ஜெயில்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது

இந்த நிலையில் ஜீவி பிரகாஷ் நடித்து வந்த படங்களில் ஒன்று ’பேச்சிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த 15 நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் 15 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் படக்குழுவினர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக திவ்யபாரதி நடித்துள்ளார் என்பதும், இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் இயக்குனர் மிஷ்கின் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.