ஜிவி பிரகாஷூக்கு ஏ.ஆர்.முருகதாஸ் செய்யும் உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் ஒரே நேரத்தில் அதிக திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். நடிப்பு, இசை என இரண்டையும் பேலன்ஸ் செய்து வரும் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்று 'ஐங்கரன்'.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் இம்மாதம் 24ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இந்த டீசரை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தை ரவி அரசு இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'ஈட்டி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ்குமார் இசையில் சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவில் ராஜா முகமது படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
The teaser of #Ayngaran #AyngaranTeaserfromOCT24th from the hit director of #eeti @dir_raviarasu the teaser to be unveiled by @ARMurugadoss sir on 24th evening 6.00 ... @ctcupdates #Ayngaran @CtcMediaboy pic.twitter.com/lQ8KPOXTWK
— G.V.Prakash Kumar (@gvprakash) October 22, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com