ஜிவி பிரகாஷின் 'டக்கரு பார்வை' ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Monday,August 26 2019]

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்துக் கொண்டு வருவதால் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள், புரமோஷன்கள் தினமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் நேற்று அவர் நடித்து வரும் 'ஆயிரம் ஜென்மங்கள்' படத்தின் பர்ஸ்ட்லுக் வெளிவந்தது. அதேபோல் இன்று அவர் நடித்து வரும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தின் பிரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் இன்னொரு படமான 'ஐங்கரன்' என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் லிரிக் விடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டக்கரு பார்வை' என்று தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

அதர்வா நடித்த 'ஈட்டி' படத்தை இயக்கிய ரவிஅரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி, உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் சானு வர்கீஸ் ஒளிப்பதிவில் ராஜா முகமது படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
 

More News

'காப்பான்' திரைப்படத்திற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் 'காப்பான்'.

மீண்டும் தல-தளபதி படங்கள் மோதுகிறதா?

கடந்த 2014ஆம் ஆண்டு தல அஜித் நடித்த 'வீரம்' மற்றும் தளபதி விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

நான் சண்டை போட்டா, நீங்க கேம் விளையாட மாட்ட! கவின் - லாஸ்லியா உரையாடல்

பிக்பாஸ் வீட்டில் இன்று கவினை பெரும்பாலானோர் நாமினேட் செய்துள்ள நிலையில் அடுத்த புரமோவில் கவின், லாஸ்லியா இடையே நடைபெறும் உரையாடல் இடம்பெற்றுள்ளது

விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் கதறி அழுத மகன் பிரபாகரன்

கேப்டன் விஜயகாந்த் நேற்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். அவருடைய இல்லத்திற்கு நேற்று ஆயிரக்கணக்கான தேமுதிக தொண்டர்கள் சென்று அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

'தல 60' படத்தில் அஜித் கேரக்டர் குறித்த தகவல்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து உலகம் முழுவதும் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அவரது அடுத்த படமான 'தல 60' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளது