ஜிவி பிரகாஷின் அடுத்த பட இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,August 09 2019]
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஏற்கனவே சர்வம் தாளமயம்', 'குப்பத்து ராஜா', 'வாட்ச்மேன்' ஆகிய திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. மேலும் '100% காதல்', 'ஐங்கரன்', 'அடங்காதே' உள்பட ஒருசில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்றான 'ஐங்கரன்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
'ஐங்கரன்' திரைப்படத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தி 'ஈட்டி' இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார்.
ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளி வெங்கட், ஹரிஷ் பெராடி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சனு வர்கீஸ் ஒளிப்பதிவு, ராஜா முகமது படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.