ஜிவி பிரகாஷின் 'அடியே' .. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜிவி பிரகாஷ் நடித்த ‘அடியே’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான ‘அடியே’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி வெளியானது.
நிஜ உலகில் ஜிவி பிரகாஷின் ஒருதலை காதல் கை கூடாத நிலையில் வேதனையுடன் அவர் மாற்று உலகிற்கு செல்வதாகவும், அங்கும் நிஜ உலகம் போல் காதல் ஏற்படுவதாகவும் இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. நிஜ உலகம் மற்றும் மாற்று உலகம் என மாறி மாறி ஜிவி பிரகாஷ் பயணிக்கும் கதையை குழப்பாமல் இயக்கிய இயக்குனருக்கு ஊடகங்களின் பாராட்டு கிடைத்தது.
இந்த நிலையில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்ற ‘அடியே’ திரைப்படம் சோனி லைவ் ஓடிடியில் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரையரங்கங்களில் இந்த படத்தை மிஸ் செய்தவர்கள் வரும் 29ஆம் தேதி முதல் சோனி ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம்.
Destiny has its own plans, join us in the parallel universe of Adiyae, the quirky rom-com Streaming exclusively on Sony LIV from September 29th. #SonyLIV #AdiyaeOnSonyLIV @gvprakash @Gourayy @vp_offl @vikikarthick88 @justin_tunes @RJVijayOfficial @thinkmusicindia pic.twitter.com/AbteQKREAy
— Sony LIV (@SonyLIV) September 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments