ஜிவி பிரகாஷின் பட இயக்குனருக்கு திருமணம்.. திரையுலகினர் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷான் நடிப்பில் உருவான ‘அடியே’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். '
இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் முதலில் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிறகு படிப்படியாக தனது மீடியா வாழ்க்கையில் முன்னேறினார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’ சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இதனை அடுத்து விஜய் டிவியில் உள்ள ஒரு சில நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கினார்.
சன் டிவியில் ஒளிபரப்பான சூரிய வணக்கம் உட்பட சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் ’நட்பதிகாரம் 79’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். ஒரு சில படங்களிலும் குறும்படங்களில் நடித்த அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ’பின் ஏன்டா தலைல எண்ண வைக்கல’ என்ற படத்தை இயக்கிய நிலையி
அதன் பின்னர் ’திட்டம் இரண்டு’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஜிவி பிரகாஷ். கௌரி கிஷான் நடித்த ‘அடியே’ என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் கார்த்தி திருமணம் நேற்று நடைபெற்று உள்ளது.
இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள், சின்னத்திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். விக்னேஷ் கார்த்திக் திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com