close
Choose your channels

ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

Tuesday, December 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் குறுகிய இடையில் அவர் நடித்த இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கி வந்த 'ஐங்கரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளதால் இந்த படம் ஜனவரி 26ல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளிவெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment