ஜிவி பிரகாஷின் 'ஐங்கரன்' ரிலீஸ் குறித்த முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,December 04 2018]

கோலிவுட் திரையுலகின் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்வம் தாளமயம்' திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் குறுகிய இடையில் அவர் நடித்த இன்னொரு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் ரவி அரசு இயக்கி வந்த 'ஐங்கரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத பொங்கல் தினத்தில் சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட' மற்றும் தல அஜித்தின் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளதால் இந்த படம் ஜனவரி 26ல் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஜிவி பிரகாஷ், மஹிமா நம்பியார், காளிவெங்கட், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை காமன்மேன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'பேட்ட' விஜய்சேதுபதியின் அட்டகாசமான கெட்டப்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்துள்ள விஜய்சேதுபதியின் கேரக்டர் பெயரும் கெட்டப்பும் இன்று மாலை வெளிவரவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம்

தனுஷ்-விஜய்சேதுபதி போட்டியில் இணைந்த சிவகார்த்திகேயன்

கோலிவுட் திரையுலகில் இளம் நடிகர்களிடையே போட்டி இருந்தாலும் இவர்களுடைய படங்கள் வெவ்வேறு நாட்களில் வெளிவந்ததால் இவர்களில் யார் வசூல் ஸ்டார் என்பது தெரியாமல் இருந்தது

26 வருடங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் ரீஎண்ட்ரி

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகள் அனைத்திலும் உருவாகும் படங்களுக்கு இசையமைத்துவிட்டார்.

பிரமாண்டமாக தயாராகி வரும் அஜித்தின் கனவு இல்லம்

தல அஜித்தின் நீண்ட நாள் கனவுகளில் ஒன்று ஈசிஆர் பகுதியில் ஒரு சொகுசு பங்களா கட்ட வேண்டும் என்பதுதான். இதற்கான பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன் ஆரம்பித்த அஜித்,

கமலின் கடைசி படம் இதுதானா?

திரைத்துறை, அரசியல் துறை என இரண்டு குதிரைகளில் ஒருசேர பயணம் செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன், ஒருபக்கம் தனது கட்சியான மக்கள் நீதி மய்யம் கட்சியின் பணிகளை கவனித்து கொண்டே