கார்த்தியின் 'சர்தார்' படத்தின் செம அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்: ரசிகர்கள் உற்சாகம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பதும் இந்த படம் தீபாவளியன்று பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பல காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது என்பதும், குறிப்பாக அஜர்பைஜான் நாட்டில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு வித்தியாசமான வேடங்களில் கார்த்தி நடித்துள்ள ‘சர்தார்’ படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை லைலா இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். ‘சர்தார்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் டீஸர் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கார்த்தியின் ரசிகர்கள் உற்சாக மாறியுள்ளனர்.
Super excited about the first single of #sardar coming real soon @Karthi_Offl @Psmithran @george_dop @Prince_Pictures @AntonyLRuben pic.twitter.com/5hrqBYFFh0
— G.V.Prakash Kumar (@gvprakash) September 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments