சுதா கொங்கராவின் அடுத்த படத்தை மறைமுகமாக அறிவித்த ஜிவி பிரகாஷ்.. உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சுதா கொங்கரா தற்போது ’சூரரைப்போற்று’ ஹிந்தி படத்தை இயக்கி வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த மறைமுகமான அறிவிப்பை ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் அதே நேரத்தில் சூர்யாவின் அடுத்த படம் ’வாடிவாசல்’ என்று கூறப்படும் நிலையில் சுதா கொங்கரா - சூர்யா இணையும் திரைப்படம் எப்போது? என்பது குறித்த கேள்வி எழுந்தது..
இந்நிலையில் இயக்குனர் வெற்றி மாறன் ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பிஸியாக இருப்பதால் ’வாடிவாசல்’ திரைப்படம் தள்ளி போகும் என்று கூறப்படுகிறது. எனவே ‘கங்குவா’ படத்தை அடுத்து சூர்யாவின் அடுத்த படம் சுதா கொங்கரா படம் தான் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று சுதா கொங்கராவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த ஜிபி பிரகாஷ் ’உங்களது ’சூரரைப்போற்று’ ஹிந்தி வெர்ஷன் பார்க்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் அதே போல் அடுத்த படம் தமிழில் எது என்று குறிப்பிட்டு பயர் எமோஜிகளை வெளியிட்டுள்ளார்.
இதனை அடுத்து சுதா கொங்கரா அடுத்த படம் சூர்யாவின் 43 வது படம் தான் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டு உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.
Happy birthday dear @Sudha_Kongara …. Waiting for the world to witness the magic u have done with #SooraraiPottru Hindi version which is going to stun Bollywood … and ur next after that in tamil which is 🔥🔥🔥🔥🔥
— G.V.Prakash Kumar (@gvprakash) July 5, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments