பாட்டு பாடிய சம்பளத்தை படிப்புச் செலவுக்கு கொடுக்கும் ஜி.வி… கொண்டாடும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த இசையமைப்பாளர்களுள் ஒருவராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவருடைய பின்னணி இசையைக் காட்டிலும் இவருடைய சினிமா பாட்டுக்கு ஏராளாமான ரசிகர்கள் உள்ளனர். கூடவே பாடுவதிலும் நடிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய கேரியரிலேயே இதுவரை செய்யாத ஒரு காரியத்தை தற்போது செய்துள்ளார். அதாவது விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றிற்கு இவர் டைட்டில் பாடலை பாடிக்கொடுத்து உள்ளார்.
பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா முதலிடம் பிடித்து இருப்பதைப் போலவே தற்போது வெப் சீரிஸ்களும் ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகின்றன. கூடவே இதில் நடிக்கும் நடிகர்களுக்கு அதிகச் சம்பளம் கிடைப்பதால் தற்போது முன்னணி நடிகைகளும் வெப் சீரிஸ்களை விரும்ப ஆரம்பித்து விட்டனர்.
அந்த வரிசையில் தற்போது தமிழில் புதிதாக ஒரு வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. “ஆதலினால் காதல் செய்வீர்” எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்த வெப் சீரிஸின் டைட்டில் பாடலைத்தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இதற்கு முன்பு முன்னணி இசையமைப்பாளர்கள் யாரும் ஒரு வெப் சீரிஸிற்கு இசையமைக்கவோ அல்லது பாடல் பாடாவோ செய்யாத நிலையில் முதல் முறையாக ஜி.வி. பிரகாஷ் இந்த வெப் சீரிஸ்க்கு டைட்டில் பாடலை பாடியுள்ளார்.
“ஹே நண்பா… நேத்து நாளை கவலை இல்ல… இன்று மட்டும் போதுமே! ஹே நண்பா… கடலும் மணலும் போலவே சேர்ந்திருப்போம் எப்போதுமே…” எனத் தொடங்கும் இந்த பாடல் நேற்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தப் பாடலுக்கான ஊதியத்தை முதுகலைப் பட்டம் படித்துவரும் மாணிவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு கொடுக்கப் போவதாக ஜி.வி. பிரகாஷ் தெரிவித்து உள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments