மழையால் பாதித்த மக்களுக்கு ஜி.வி.பிரகாஷின் மகத்தான உதவி
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டை ஞாபகப்படுத்தும் வகையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பல மணி நேரம் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
மேலும் கனமழை காரணமா இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கின்றன. இந்த மழை நேரத்தில் எந்த மெக்கானிக் ஷாப்பும் திறக்கவில்லை என்பதால் வாகன ஓட்டிகள் பழுதுகளை சரிசெய்ய முடியாமல் பரிதாப நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் இவர்களுக்காக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் ஒரு மகத்தான உதவி செய்ய முன்வந்துள்ளார். சென்னை ராயப்பேட்டை பகுதியில் யாராவது கார் அல்லது இருசக்கர வாகனம் பழுதாகி நின்றால் உடனடியாக 9002186265 மற்றும் 7667866265 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டால் இலவசமாக வாகனங்கள் பழுதுபார்க்க மெக்கானிக்குகளை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த உதவியை தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com