என்னால் முடிந்த சிறு உதவி.. சிறுவன் உயிர் காக்க ஜிவி பிரகாஷ் கொடுத்த தொகை..!

  • IndiaGlitz, [Saturday,November 25 2023]

சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்காக ஜிவி பிரகாஷ் செய்த பண உதவி குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் மற்றும் நடிகராக இருந்து வரும் ஜிவி பிரகாஷ் ஏற்கனவே பலருக்கு பண உதவி செய்துள்ளார் என்பது தெரிந்ததே. ஆன்லைன் மூலம் பலருக்கு கல்வி கற்க, மேல் படிப்பு படிக்க, மருத்துவத்திற்கும் உதவி செய்துள்ளார். அதுமட்டுமின்றி சமூக அவலங்களுக்கு எதிராகவும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் குரல் கொடுத்து வருகிறார்..

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு சிறுவனின் உயிரை காப்பாற்ற உதவி செய்துள்ளார். சிறுவனின் மூளைக்கு அருகே கட்டி ஒன்று இருந்ததாகவும் அதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதற்காக ஜிவி பிரகாஷிடம் ஆன்லைன் மூலம் உதவி கோரிய சிறுவனுக்கு ஜிவி பிரகாஷ் ரூ.75000 பணம் அனுப்பி உள்ளார். அதில் ’என்னால் முடிந்த சிறு உதவி ’என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து ஜிவி பிரகாஷுக்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

More News

இந்த வாரம் டபுள் எவிக்சன் ஆவது இவர்கள் தான்.. புல்லிங் குரூப் இனி என்ன ஆகும்?

பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த வார இறுதியில் மூன்று எக்ஸ் போட்டியாளர்கள் உள்ளே வரப் போகிறார்கள்

தனுஷ், சிம்பு நாயகியின் முதல் தயாரிப்பு திரைப்படம் ரிலீஸ்.. பாசிட்டிவ் ரிசல்ட் என தகவல்..!

தமிழ் திரை உலகில் தனுஷ், சிம்பு  உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை தயாரித்த முதல் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன

சல்மான்கான் அடுத்த படத்தை இயக்குவது அஜித் பட இயக்குனரா?

அஜித் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர், சல்மான் கான் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

அஜர்பைஜானில் இருந்து திடீரென சென்னை திரும்பிய அஜித்.. 'விடாமுயற்சி' படக்குழு எங்கே?

 அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக அஜர்பைஜானில்  நடந்து வந்த நிலையில் திடீரென அஜித் மட்டும் சென்னை திரும்பி உள்ளதாகவும் 'விடாமுயற்சி' படக்குழுவினர் துபாய்

மன்சூர் அலிகான் மன்னிப்புக்கு த்ரிஷா அளித்த பதில்.. முடிவுக்கு வந்ததா பிரச்சனை?

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் இன்று காலை மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதற்கு த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு இணையத்தில்