தேர்வு கட்டணம் செலுத்த முடியாமல் இருந்த அஜித் ரசிகர்.. உதவி செய்த இசையமைப்பாளர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கல்லூரி மாணவி ஒருவரின் தேர்வு கட்டணத்தை செலுத்த பணம் அனுப்பி உதவி செய்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது அஜித் ரசிகர் ஒருவருக்கு கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்தி உதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் அஜித் ரசிகர் ஒருவர் தான் கல்லூரியில் படித்து கொண்டிருப்பதாகவும், தனக்கு தேர்வு கட்டணம் செலுத்த உதவி செய்ய வேண்டும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஜிவி பிரகாஷ் இடம் உதவி கேட்டிருந்தார்.
அந்த ட்விட்டில், ‘நான் கோவையில் கல்லூரியில் படித்து வருகிறேன். பக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்துதான் என்னுடைய கல்லூரி கட்டணத்தையும் மற்ற செலவுகளையும் பார்த்து வந்தேன். ஆனால் இரண்டு வாரத்திற்கு முன்பு என்னுடைய அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டதால் கல்லூரி தேர்வுக்கு கட்ட வேண்டிய பணத்தை வைத்து எனது அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்து விட்டேன். தற்போது என்னிடம் கல்லூரி தேர்வு கட்டணம் செலுத்த பணம் இல்லை. பணம் கட்டவில்லை என்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். எனவே உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள் அண்ணா’ என்று ஜிவி பிரகாஷ் இடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனை அடுத்து அவருடைய கூகுள்பே நம்பரை வாங்கிய ஜிவி பிரகாஷ் அவருடைய வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அந்த அஜித் ரசிகர் நன்றி தெரிவித்த நிலையில் அவர் நன்றாக தேர்வு எழுத ஜிவி பிரகாஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com