விஜய், ரஜினியை அடுத்து ஜி.வி.பிரகாஷ்?

  • IndiaGlitz, [Saturday,November 14 2015]

முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதோடு, ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவர் நடித்த 'டார்லிங்' மற்றும் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்களும் நல்ல வசூல் தந்ததால், வெற்றிகரமான இசையமைப்பாளராக மட்டுமின்றி வெற்றிகரமான நாயகனாகவும் கோலிவுட்டில் வலம் வருகிறார்.

இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஜி.வி.பிரகாஷ் தற்போது 'புரூஸ் லீ', 'கெட்ட பையன்டா இந்த கார்த்தி', 'கைப்புள்ள' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்துள்ள 'பென்சில்' என்ற படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய்யின் 'கத்தி' படத்தை தயாரித்த 'லைகா' நிறுவனம் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் ரஜினி நடிக்கவுள்ள 'எந்திரன் 2' படத்தையும் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.