ஜிவி பிரகாஷின் அடுத்த பட டைட்டில் லுக் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Thursday,December 02 2021]

தமிழ் திரையுலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் ஒரே நேரத்தில் சவாரி செய்துவரும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ’ஜெயில்’ மற்றும் ’பேச்சுலர்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்த ரிலீசாக உள்ளன. ஏற்கனவே அவர் நடித்த அரை டஜனுக்கும் மேலான படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன என்பதும் ஒரு சில படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் ஞானவேல்ராஜா மற்றும் சிவி குமார் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ’ரிபல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது,

அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த படைப்பு: முக்கிய வேடங்களில் இரு பிரபலங்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் அடுத்த படைப்பில் இரண்டு பிரபலங்கள் நடித்து இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை

அபிஷேக் முகத்தில் பேப்பரை தூக்கியெறிந்த சிபி: ஒரே அணிக்குள் ஏற்பட்ட மோதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் ரெட் டிவி மற்றும் புளூ டிவி என இரண்டு அணிகள் பிரிந்து ஒவ்வொரு அணியில் உள்ளவர்கள்

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே! 'மாநாடு' வெற்றிக்கு நன்றி தெரிவித்த யுவன்!

சிம்பு நடித்த 'மாநாடு' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு சிம்பு, எஸ்ஜே சூர்யா, இயக்குனர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் ஆகியோர்

வெளியாவதற்கு முன்பே 100 கோடி வசூல்… புதிய சாதனை படைத்த  மரைக்காயர் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடிப்பில் நாளை (டிசம்பர் 2) வெளியாகவுள்ள திரைப்படம் “மரைக்காயர்- அரபிக் கடலின்டே சிம்ஹம்“

'நான் பார்த்த முதல் முகம்': 'வலிமை' அம்மா பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 'வலிமை' படத்தின் அம்மா சென்டிமென்ட்