'மாறன்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி ’மாறன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மாறன்’ படத்தின் பின்னணி இசை பணிகள் குறித்த அப்டேட் ஒன்றை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். ’மாறன்’ படத்தின் ஆடியோ தற்போது இறுதிகட்ட பணியில் இருப்பதாகவும் இந்த படத்தில் 4 பாடல்கள் கம்போஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அதில் மாறன் தீம் தனுஷ் ரசிகர்கள் உள்பட அனைவரும் கவரும் வகையில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
’மாறன்’ படத்தின் பாடல்கள் மிக விரைவில் ரிலீஸ் ஆகும் என்றும் அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட், கிருஷ்ணகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’மாறன்’ படத்தை அடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் அதனை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Maaran update — #maaran audio at final stages of work … will have 4 tracks which includes the raging #maaran theme … audio soon @dhanushkraja @SathyaJyothi_ @karthicknaren_M @MalavikaM_ @LahariMusic
— G.V.Prakash Kumar (@gvprakash) November 7, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments