ஜி.வி.பிரகாஷூக்கு கிடைத்த இரண்டாவது பட்டம்

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைத்துறையில் ஜொலிப்பது போலவே சமூக சேவைகளிலும் ஈடுபட்டு, பொதுமக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஜல்லிக்கட்டில் தொடங்கி நீட், கதிராமங்கலம், நெடுவாசல், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க என அவருடைய குரல் அவ்வப்போது ஓலித்து வந்த நிலையில் அவருடைய சமூக சேவையை கௌரவிக்கும் விதமாக செயின்ட் ஆண்ட்ரீவ் இறையியல் பல்கலைக்கழகம் ஜி.வி.பிரகாஷிற்கு கடந்த ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக ஜி.வி.பிரகாஷுக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஜி.வி.பிரகாஷ் எடுத்த முயற்சிகளை பாராட்டி அவருக்கு புதுவையில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இந்த தகவலை ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். சிறிய வயதில் இரண்டாவது முறையாக டாக்டர் பட்டம் பெற்ற ஜி.வி.பிரகாஷூக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.