close
Choose your channels

இந்த படம் ஒரு நாள் நிச்சயம் வரும்.. 100% கேரண்டி.. ஜிவி பிரகாஷின் கனவுப்படம்..!

Thursday, December 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாக இருந்த கனவு படம் தள்ளிப் போய் உள்ளதாகவும் ஆனால் 100% சதவீதம் இந்த படம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என இரண்டு குதிரைகளில் வெற்றிகரமாக சவாரி செய்து வருபவர் ஜிவி பிரகாஷ். சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனத்துடன் உள்ளார் என்பதும் அதனால் இவரது படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘இயக்குனர் ராம் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தான் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த படம் ஒரு சில காரணங்களால் தள்ளிப் போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும் என்றும் அதற்கு தான் 100% கேரண்டி என்றும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ராம், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் ஒரு சில வெற்றி படங்கள் வெளியாகி உள்ள நிலையில் அதில் ஒரு நடிகராக ஜிவி பிரகாஷ் ஒரு நடிகராக மட்டும் இணைய இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் முழுக்க முழுக்க இது ரொமான்ஸ் கதை அம்சம் கொண்டது என்றும் கூறப்படுவதை அடுத்து ஜிவி பிரகாஷ் திரை உலக வாழ்வில் இந்த படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment