வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்: ஜிவி பிரகாஷ் கண்டனம்

  • IndiaGlitz, [Tuesday,May 22 2018]

தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் இன்று நடந்த வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியான அப்பாவி பொதுமக்கள் 9 பேர்களின் மரணத்திற்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம் என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஷால் உள்பட பல கோலிவுட் திரையுலகினர்களும் இந்த சம்பவத்திற்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு கொடுத்து வரும் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது:

உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மக்கள் போராடுவதற்கு தடை விதிக்க முடியாது என்பதால், தங்கள் உரிமைக்காக அமைதி பேரணி சென்ற எம் மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்தியது வன்மையாக கண்டிக்கதக்கது.

சில நூறு பேர் கொண்ட உங்களுக்கு முன்னால் நிற்கும் பல்லாயிரக்கணக்கான எம் மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும்... வரலாற்று பிழை செய்து விட்டீர்கள்.

சுவாசிக்க தூய்மையான காற்றை கேட்டவர்களின் மூச்சை நிறுத்திவிட்டது இந்த சனநாயகம்.'

இவ்வாறு ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.

More News

அமைதி காத்தது போதும், இப்போதாவது பேசுங்கள்: பிரதமருக்கு விஷால் கோரிக்கை

இன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தால் 9 பேர் பரிதாபமாக பலியாகினர்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: கமல்ஹாசன், ரஜினிகாந்த் கருத்து

தூத்துகுடியில் இன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிந்தது. தூத்துகுடி கலெக்டர் அலுவலகத்திற்குள் 144 தடையை மீறி உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை

துப்பாக்கி சூடு சரிதான்: எச்.ராஜா

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவரது டுவிட்டரில் பதிவாகும் கருத்துக்களில் சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது.

ஸ்டெர்லைட் வன்முறை: பற்றி எரிகிறது ஊழியர்களின் 6 மாடி குடியிருப்பு கட்டிடம் 

தூத்துகுடியில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து அதன் காரணமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் பலி

தூத்துகுடி துப்பாக்கி சூடு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடந்து வரும் நிலையில் இன்றைய போராட்டம் வன்முறையாக வெடித்து