close
Choose your channels

'தனுஷ் 43' படம் குறித்த அசத்தலான தகவல் அளித்த ஜிவி பிரகாஷ்

Saturday, March 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடித்த ’அசுரன்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளிவந்து நல்ல வெற்றியைப் பெற்றதையடுத்து தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய’ஜெகமே தந்திரம்’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்

இந்த நிலையில் தற்போது பாலிவுட் படம் ஒன்றில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷின் அடுத்த படமான ’தனுஷ் 43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாக வந்த தகவலை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ’தனுஷ் 43’ படத்திற்காக இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை எழுதியவர் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது அனைவருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் ’தனுஷ் 43’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் இந்த படத்தை சமீபத்தில் வெளியான ’மாபியா’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment