ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்யும் அழகை வச்சகண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் நடிகை: வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Sunday,April 23 2023]

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது படத்திற்கு கம்போஸ் செய்யும் பாடலை வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிக்கும் பிரபல நடிகையின் வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனாவத் என்பதும் இவர் தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’தலைவி’ என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’எமர்ஜென்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்திரா காந்தி வேடம் கங்கனாவுக்கு மிக கச்சிதமாக பொருந்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை அவர் கம்போஸ் செய்யும் அழகை அருகே உட்கார்ந்து பார்த்து ரசிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் கங்கனா ரனாவத் வெளியிட்டுள்ளார். ஒரு இசை ரசிகராக ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்ததை நான் பார்த்து ரசித்தேன் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்திற்காக ஜீவி பிரகாஷ் 10 நிமிட நீளமான பாடல் ஒன்றை கம்போஸ் செய்திருந்ததாக கங்கனா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கங்கனா இந்த படத்தில் நடிப்பது மட்டுமின்றி இந்த படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் அனுபம்கெர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.